அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூரில் அதிமுக கிளை செயலாளர் உள்பட 40 பேர் திமுகவில் ஐக்கியம்

2 months ago 10

 

கரூர், நவ. 18: தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திமுக தலைவரும். தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையே சிறந்தது என்பதை உணர்ந்து, கரூர் சட்டமன்றம் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்கா வாடி பகுதியைச் சேர்ந்த அதிமுகவை சேர்ந்த காக்காவாடி ஊராட்சி செயலாளர் எம்.தினேஷ் தலைமையில், ஒன்றிய இணைச் செயலாளர் பொன்னுச்சாமி, காக்காவாடி கழக கிளை செயலாளர் குங்கும ராஜா மற்றும் 40 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அந்த கட்சியில் இருந்து விலகி கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சிவகாமசுந்தரி, மொஞ்சனூர் இளங்கோ, இரா.மாணிக்கம், ஒன்றிய செயலாளர் எம். ரகுநாதன், காக்காவாடி விஜயகுமார், கரூர் மாநகர பகுதி செயலாளர்கள் கரூர் கணேசன், ஆர்எஸ்.ராஜா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூரில் அதிமுக கிளை செயலாளர் உள்பட 40 பேர் திமுகவில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Read Entire Article