அமெரிக்காவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 1440 பழங்கால பொருட்கள் இந்தியாவுக்கு வருகிறது

2 months ago 13

நியூயார்க்: அமெரிக்காவிற்கு கடத்திவரப்பட்ட 1440 பழங்கால பொருட்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேன்ஹட்டன் மாகாண அட்டர்னி ஆல்வின் பிராக் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ பழங்கால பொருட்களை கடத்தும் சுபாஷ் கபூர், தண்டனை பெற்ற கடத்தல்காரர் நான்சி வீனர் உட்பட குற்றவியல் சம்பவங்கள், கடத்தல் நெட்வொர்க்குகள் தொடர்பான பல விசாரணைகளின் கீழ் மீட்கப்பட்ட இந்தியாவின் பழங்கால பொருட்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

சுமார் ரூ.84 கோடி மதிப்புள்ள 1440 பழங்கால பொருட்கள் இந்திய மக்களுக்கு திருப்பி அளிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் பழங்கால பொருட்களில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து 1980ம் ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு வான நடனக் கலைஞரை சித்தரிக்கும் மணற்கல் சிற்பம், ராஜஸ்தானின் தனேசரா-மஹாதேவா கிராமத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பச்சை-சாம்பல் நிற ஸ்கிஸ்டில் இருந்து செதுக்கப்பட்ட தனேசர் தாய் தெய்வம் ஆகியவை முக்கியமானவை ஆகும். இந்த சிலைகளும் தற்போது இந்தியாவுக்கு மீண்டும் வரவுள்ளன.

The post அமெரிக்காவுக்கு கடத்திச்செல்லப்பட்ட 1440 பழங்கால பொருட்கள் இந்தியாவுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Read Entire Article