அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளா திரும்பினார்

9 hours ago 1

திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக கடந்த 5-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள மினாசோட்டோ மயோ கிளினிக்கில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 நாட்கள் நடந்த சிகிச்சைக்கு பின் முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது மனைவியுடன் அதிகாலை 3.30 மணிக்கு கேரளா திரும்பினார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பினராயி விஜயனை, தலைமை செயலாளர் ஜெயதிலக், டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதல்-மந்திரி பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றது இது 4-வது முறையாகும்.

Read Entire Article