
வாஷிங்டன்,
அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களுடன் 3-வது விமானம் அமிர்தசரஸ் வந்ததுஅமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியை டொனால்டு டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்தில் கடந்த 5 ஆம் தேதி 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் கை மற்றும் கால்கள் விலங்கிட்ட நிலையில் அழைத்து வரப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து நேற்று இரவு 2-வது பேட்சாக 116 இந்தியர்களுடன் மற்றொரு அமெரிக்க ராணுவ விமானம் இந்தியா வந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் இன்று இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் வந்தது. இந்த விமானத்தில் பஞ்சாப் 31, ஹரியானா 44, குஜராத் 33, உத்தர பிரதேசம் 2, ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த தலா ஒருவர் வந்துள்ளனர். குடியேற்ற விதிகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பிறகு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.