புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 178 கோரிக்கைகளை இந்தியா விடுத்துள்ளது. இதில் 23 பேர் வெற்றிகரமாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’நாடு கடத்தல் தொடர்பாக இந்தியா சார்பில் அமெரிக்காவிடம் 65 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. நாடு கடத்தல் தொடர்பாக இந்தியா இதுவரை 48 நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது’ என்றார்.
The post அமெரிக்காவிலிருந்து 65 பேரை நாடு கடத்த கோரிக்கை appeared first on Dinakaran.