அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது - டிரம்ப்

15 hours ago 1

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். எதிர்க்கட்சிகளிடன் கடும் அமளிக்கிடையே ஜனாதிபதி டிரம்ப் பேசியதாவது:-

அமெரிக்க ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க உழைத்து வருகிறோம். கடந்த 6 வாரங்களில், நான் கிட்டத்தட்ட 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளேன், 400க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

நான் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள், அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலையை பிரகடப்படுத்தினேன். நமது நாட்டின் மீதான படையெடுப்பைத் தடுக்க அமெரிக்க ராணுவத்தையும் எல்லைப் படையையும் நான் நிறுத்தினேன்.

இதன் விளைவாக, கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான முந்தைய ஆட்சிக்காலத்தில், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருந்தனர். பெரும்பாலான நிர்வாகங்கள் 4 அல்லது 8 ஆண்டுகளில் நிறைவேற்றியதை விட 43 நாட்களில் நாம் அதிகமாகச் சாதனை செய்துள்ளோம் என தெரிவித்தார்.

Read Entire Article