அமெரிக்காவின் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது; அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி கண்டனம்

3 days ago 2

புதுடெல்லி: அதானி குழுமத்தின் 11 பொது நிறுவனங்களில் எந்த நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அறிக்கைக்கு அதானி குழுமம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது அடிப்படையற்றது என்று கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி தனது எக்ஸ் வலைதள பதிவில்;
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தாக்கல் செய்ததில் அதானி நிறுவனமும் எந்த தவறும் செய்யவில்லை
“கடந்த இரண்டு நாட்களில் அதானி குழும விவகாரங்கள் தொடர்பாக பல செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். இது குறிப்பாக அதானி கிரீனின் ஒட்டுமொத்த வணிகத்தில் சுமார் 10 சதவீதமான ஒப்பந்தத்துடன் தொடர்புடையது

அதானி குழுமம் 11 பொது நிறுவனங்களின் தொகுப்பை கொண்டுள்ளது, அவை எதுவும் குற்றப்பத்திரிகைக்கு உட்பட்டவை அல்ல. சட்டப்பூர்வ ஆவணத்தில் வழங்கப்பட்டுள்ள விஷயத்தை விரிவாக மதிப்பாய்வு செய்தவுடன் நாங்கள் முழுமையாக பதிலளிப்போம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் குற்றச்சாட்டுகளின் “குறிப்பிட்ட தன்மையை” குழுமம் அறிந்தது. இந்த அறிக்கை வெளிவந்த பிறகு, அதானி குழுமம், இவை வெறும் குற்றச்சாட்டுகள் என்றும், அதை அப்படியே பார்க்க வேண்டும் என்றும் கூறியது. சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என CFO ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அதானி க்ரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் மறுக்கப்பட்டவை என்று அதானி குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post அமெரிக்காவின் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது; அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article