அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: சர்வதேச அணுசக்தி முகமைக்கு ஒத்துழைப்பு இல்லை - ஈரான் அதிபர் உத்தரவு

1 week ago 5

துபாய்,

ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைத்தது. அதேநேரம் சமீபத்தில் தனது நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் அணுசக்தி திட்டங்கள் அமைதிக்கானதும், உள்நாட்டு தேவைக்கானதும் என ஈரான் அறிவித்தபோதும், நடந்த இந்த தாக்குதல்கள் அந்த நாட்டை கோபத்தின் உச்சிக்கு தள்ளியது.

எனவே சர்வதேச அணுசக்தி முகமைக்கு இனியும் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அந்த நாடு முடிவு செய்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அணுசக்தி முகமைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நிறுத்த ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உத்தரவிட்டு உள்ளார். இந்த தகவலை அந்த நாட்டு ஊடகம் தனது ஆன்லைன் தளத்தில் கூறப்பட்டு உள்ளது.

Read Entire Article