வாஷிங்டன்: அமெரிக்கவின் 39வது அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், 100 வயதில் காலமானார். 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்த இவர், 2002-ல் அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வென்றார். தனது பதவிக் காலத்திற்குப் பிறகு மற்ற அமெரிக்க அதிபர்களை விட நீண்ட காலம் வாழ்ந்தவர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் நேற்று காலமானார். ஜார்ஜியா மாகாணம் பலின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் ஜிம்மி காலமானதாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
The post அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்! appeared first on Dinakaran.