அமெரிக்க பள்ளியில் நடந்த பயங்கரம்; துப்பாக்கி சூட்டில் ஆசிரியர் 2 மாணவர்கள் பலி: இந்தாண்டு மட்டும் 349 துப்பாக்கி சூடு

1 month ago 9

நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியான நிலையில், இந்தாண்டு மட்டும் 349 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவின் விஸ்கான்சின் அடுத்த மாடிசன் பகுதியில் செயல்படும் கிறிஸ்தவ பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மாணவர், ஆசிரியர், மற்றொரு மாணவர் என மூன்று பேர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் மாணவரும் பலியானார். மொத்தம் 3 பேர் பலியான நிலையில், மேலும் ஐந்து பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாடிசன் காவல்துறை அதிகாரி ஷான் பார்ன்ஸ் கூறுகையில், ‘தனியார் பள்ளியில் மழலையர் முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 400 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்திற்குள் மாணவர் ஒருவர், சக மாணவர்களையும் அங்கிருந்தவர்களையும் நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர், ஆசிரியர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரும் பலியானார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? என்பது குறித்து தெரியவில்லை. இருந்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார். அமெரிக்காவில் பள்ளிகளை குறிவைத்து துப்பாக்கி சூடு நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கே-12 அமைப்பு நடத்திய துப்பாக்கி சுடுதல் சம்பவம் தொடர்பான தரவுகள்படி, இந்த ஆண்டு அமெரிக்காவில் 322 பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 1966ம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு ஆண்டிலும் இத்தனை துப்பாக்கிச் சூடு நடந்தது இல்லை. கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 349 துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. நேற்று பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்க பள்ளியில் நடந்த பயங்கரம்; துப்பாக்கி சூட்டில் ஆசிரியர் 2 மாணவர்கள் பலி: இந்தாண்டு மட்டும் 349 துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Read Entire Article