அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை

2 hours ago 2


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 198 எலக்டோரல் வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 99 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி மற்றும் முன்னிலை நிலவரங்கள் வரத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 10 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். இண்டியானா, கென்டகி, டென்னஸி, மிசிசிபி, மேற்கு விர்ஜீனியா, அலபாமா, தெற்கு கரோலினா, புளோரிடா, ஒக்லஹாமா மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் 198 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார். வெர்மோண்ட், மசாசூசெட்ஸ், கனெக்டிகட், மேரிலேண்ட் ஆகிய 4 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 99 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025 ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருப்பதால், நவம்பர் 5ல் அதிபர் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், பைடன் போட்டியிலிருந்து விலகியதால் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களமிறங்கினர். கமலா ஹாரிஸ் களமிறங்கிய பிறகு தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியது.

பல ஹாலிவுட் பிரபலங்கள், இந்திய வம்சாவளிகள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவிக்க, எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்கள் டிரம்புக்காக குரல் கொடுத்தனர். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் களை கட்டியது. பொருளாதாரம், பிரிவினைவாதம், வெளிநாட்டவர்கள் குடியேற்றம் ஆகியவை தேர்தல் களத்தில் முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விறுவிறுப்பான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. தேர்தல் நாளில் கூட்டத்தை தவிர்க்க, முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி அமெரிக்காவில் உள்ளது. அதன்படி கடந்த ஒருமாதத்தில் 8.2 கோடி மக்கள் தபால் மூலமாகவும், நேரிலும் முன்கூட்டியே வாக்களித்து முடித்தனர்.

ஆனாலும், வடகரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் மக்கள் நேற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமில்லை என்பதால் பலரும் டிரைவிங் லைசன்சை அடையாளமாக காட்டி வாக்களித்தனர். இரவு 7 மணியுடன், இந்திய நேரப்படி இன்று காலை 11 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் மக்கள் தங்கள் மாகாண பிரதிநிதிகளான எம்பிக்களுக்கு வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 எம்பிக்களில் 270க்கும் மேற்பட்ட வாக்குகள் பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெறும் எம்பிக்கள் மூலம் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை appeared first on Dinakaran.

Read Entire Article