அமுதா, காகர்லா உஷா, செல்வி அபூர்வா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு: அரசு உத்தரவு

4 weeks ago 5

சென்னை: அமுதா, காகர்லா உஷா, செல்வி அபூர்வா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் துறைச் செயலாளராக பதவி வகித்து வரும் பி.அமுதா, குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தில் செயலாளர் சுதீப் ஜெயின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, வேளாண்மை உற்பத்தி ஆணையராக செல்வி அபூர்வா ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

முதன்மை செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் இந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகள், கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள பி.அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, செல்வி அபூர்வா ஆகிய 5 பேரும் 1994ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர்.

The post அமுதா, காகர்லா உஷா, செல்வி அபூர்வா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article