அமித்ஷாவை கண்டித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

11 hours ago 2

சென்னை,

காந்தியடிகளின் 78வது நினைவு நாளை ஒட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் திருவருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வருவதாக கேள்விப்பட்டோம். இதன்படி காங்கிரஸ் கமிட்டி சார்பாக அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஏனென்றால் அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை தேச பிதா ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு உற்ற தோழனாக, உறுதுணையாக இருந்த அம்பேத்கரை, தனது கருத்துகளால் அம்பேத்கர்..அம்பேத்கர்.. என்று இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அரசுக்கு தொடர்ந்து ஒரு கோரிக்கை வைக்கிறோம். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, இரும்பு கரம் போன்று பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் கூட பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு பாதுகாப்பான முறையில் தனது வீடுகளுக்கு செல்வதே சுதந்திரம், பெண்களை காப்பாற்றுவது குறித்து கடமையும் பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் எல்லோரும் அமைதியாக வாழ்கிற இடம் தமிழ்நாடு என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். சென்னையில் பெண்களுக்கு நடந்த இந்த சம்பவம் அநாகரீகமான செயல், காங்கிரஸ் கமிட்டி இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகள் அனைவரும் எங்களுடைய பிள்ளைகள், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதுதான் எங்களுடைய நோக்கம். சென்னையில் நடைபெற்ற சம்பவம் பொருத்தவரை அருவெறுப்பான சம்பவம், தலைகுனியக்கூடிய சம்பவம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தவறான சம்பவத்தில் ஈடுபடும் ஒருவரால் தமிழ்நாடு என்ற ஒட்டு மொத்த பேருக்கும் அவமானமாக உள்ளது. இனி வரும் காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் விதமாக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் பின்னர் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார். 

Read Entire Article