அமித்ஷா மன்னிப்பு கோரி கொட்டும் மழையில் காங்கிரசார் பேரணி

3 weeks ago 5

திருவள்ளூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக கூறி நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூரில் காங்கிரஸ் சார்பில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும். மோடி அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடந்தது. திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணிக்கு திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, ஆர்.எம்.தாஸ், ஆவடி மாநகராட்சி தலைவர் யுவராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், பூவை பீ.ஜேம்ஸ், திருவேற்காடு டி.ரமேஷ் வரவேற்றனர்.

இதில் மாநில நிர்வாகிகள் சதாசிவலிங்கம், ஏகாட்டூர் ஆனந்தன், இமயா கக்கன், அருணாச்சலம், சாந்தகுமார், மோகன் தாஸ், சம்பத், அஸ்வின்குமார், இமாலயா அருண்பிரசாத், சசிகுமார், திவாகர், மாவட்ட நிர்வாகிகள் விக்டரி மோகன், சதா பாஸ்கரன், அன்பழகன், சிவக்குமார், தளபதி மூர்த்தி, எஸ்.சரஸ்வதி, மணவாளன், திவாகர் சுயம்பிரகாஷ், காங்கை குமார், நகர தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் வட்டார, நகர, பேரூர் தலைவர்கள் நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி குளக்கரை சாலை, பஜார் வீதி, நேதாஜி சாலை சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்றது. அப்போது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் பிரபுசங்கரிடம் புகார் மனு அளித்தனர்.

The post அமித்ஷா மன்னிப்பு கோரி கொட்டும் மழையில் காங்கிரசார் பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article