அமித்ஷா தன்னை அழைத்ததாக கொல்கத்தாவில் இறந்த பெண் டாக்டரின் தந்தை தகவல்

2 months ago 11

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தன்னை சந்திக்க அழைத்ததாக இறந்த டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "நான் அவருடன் பேசினேன். அவர் என்னை அழைத்துள்ளார். இதை பற்றி என்னால் அதிகம் பேச முடியாது. ஆனால் சந்திப்பு நடக்கும்" என்றார்.

முன்னதாக, கடந்த மாதம் 22ம் தேதி இறந்த பெண் டாக்டரின் பெற்றோர் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். சமீபத்தில் கொல்கத்தா வந்த அமித்ஷாவை டாக்டரின் பெற்றோர் சந்திக்க இருந்த நிலையில் சில காரணங்களுக்காக சந்திக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article