மதுரை: மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜவுடன் அதிமுக கூட்டணி என சொல்ல தயக்கம் இல்லை. கூட்டணி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரது கருத்தை கூறியுள்ளார். எங்களை ஏன் காலதாமதப்படுத்துறீங்கனு கேட்கக்கூடாது. கூட்டணி மற்றும் தோழமை தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என எடப்பாடிக்கு தெரியும். கூட்டணி தொடர்பாக எடப்பாடி சொன்னதுதான் நிதர்சனமான உண்மை.
அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என அவருக்கு தெரியும். இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஏன் தனித்தனியாக அமித்ஷா வை சந்திக்க வேண்டும்’’ என்று ஈரோட்டிற்கு சென்று செங்கோட்டையனிடம் கேளுங்கள். இபிஎஸ்சிடம், செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அமித் ஷா சொன்ன தகவல் பொய்யா..? செல்லூர் ராஜூ பதில் appeared first on Dinakaran.