
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இந்து மதத்தினரால் புனித நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை மற்றும் புராண நதியான சரஸ்வதி ஆகியவை கூடும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சமீபத்தில் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். அந்த வகையில் இன்று அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து தங்கள் முன்னோர்களின் நினைவாக தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.