‘அமானுஷ்யம் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவர் இந்திரா சவுந்தரராஜன்’ - தலைவர்கள் புகழஞ்சலி

4 months ago 13

மதுரை / சென்னை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான இந்திரா சவுந்தரராஜன் (66) மதுரையில் நேற்று காலமானார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை டிவிஎஸ் நகரில் வசித்த இந்திரா சவுந்தரராஜன், சில காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று காலை குளியல் அறையில் வழுக்கி கீழேவிழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மனைவி ராதா, மகள்கள் ஐஸ்வர்யா, நிதி உள்ளனர்.

Read Entire Article