சட்டம் - ஒழுங்கு குறித்து பேச அனுமதி கோரி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். நாள் முழுவதும் அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக பேரவை தலைவர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது துறைகள் குறித்த மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளிக்க தொடங்கினார். இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு குறித்து பேச எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அனுமதி கோரினார். அப்போது நடைபெற்ற விவாதம்: