கரூர்: கரூர் மாவட்டத்தில் அமராவதி பாசன பகுதிகளில் சவுக்கு மரம் சொட்டு நீர் முறையில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை பொருத்தமட்டில் விவசாயிகள் மற்றும் தொழில் அதிபர்கள் புதுப்புது தொழில்கள் விவசாயம் கண்டுபிடித்து கஷ்டப்பட்டு வருமானம் ஈட்டுவதில் தனி கவரும் செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட மரப்பயிராகும். இம்மரம் அதிக அளவாக 40 மீ உயரமும், 50 மீ சுற்றளவும் (180 செ.மீ) கொண்டதாக வளரும். உவர் மண், உப்பு நீரிலும் லாபம் தரும் சவுக்கு சாகுபடி செய்யலாம். இதில் தென்னை சாகுபடி செய்தால், வெற்றிகரமான விளைச்சல் கிடைக்காது. ஓர் ஆச்சரியமான விஷயம், நாற்றுகள் நடும்போது எந்த உரமும் கொடுக்க தேவையில்லை. அதுக்கு பிறகும் உரம் தேவையில்லை.
நாற்றுகள் நடவு செய்து, ஒரு ஆண்டுக்கு பின், சவுக்கு மரங்களோட தண்டுப் பகுதியில் காயம் ஏற்படாத வகையில், ரொம்ப கவனமாக பக்க கிளைகளை வெட்டி கவாத்து செய்யப்படம். மூன்றே ஆண்டில் எங்கள் சவுக்கு தோப்பு, நல்ல அடர்ந்த காடு மாதிரி மாறியதால், பலவிதமான உயிரினங்கள் தங்குமிடமாகவும் மாறியது. 4வது ஆண்டு, ஒவ்வொரு மரமும் திரட்சியாக பெருத்து, 20 – 30 அடி உயரத்துக்கு வந்துவிடும். சவுக்கு மரங்களை வெட்டி, எடை போட்டு விற்கலாம் ஒரு ஏக்கரில் 25 டன் முதல் 30 டன் முதல் சவுக்கு மரம் கிடைக்கும். தற்போது ஒரு டன் ரூ.6500 விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில், அபிபாளையம் சுக்காலியூர், புலியூர் பகுதி, வேட்டமங்கலம், மூலமங்கலம் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலமாகவும் விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தற்போது சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயிகள் சாகுபடி செய்வதில் தனி கவரும் செலுத்துகின்றனர். சவுக்கு மரத்திற்கு மரங்கள் போல அடிக்கடி செலவு செய்ய வேண்டியது இல்லை. மேலும் குறைவான நீர் போதுமானது விவசாயிகள் சவுக்கு மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சவுக்கு மரத்தின் தேவையானது பந்தலமைப்பதற்கும், விவசாயத்திற்கும், பேப்பர் தயாரிப்பதற்கு தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருளாகவும் விளங்குகிறது. மேலும் சவுக்கு மரத்தில் தயாரிக்கப்படும் பேப்பர் மிகவும் தரமானதாக இருப்பதால் அதிக கிராக்கி உள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிக அளவு சவுக்கு சாகுபடி செய்யப்பட்ட போதிலும் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய பண பயிராக சாகுபடி செய்வது குறிப்பிடத்தக்கது.
The post அமராவதி பாசன பகுதிகளில் சொட்டு நீர் முறையில் சவுக்கு மரம் சாகுபடி: 3 ஆண்டில் 25 டன் கிடைக்கும்; கரூர் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.