அமரன் படத்துக்கு எதிராக முற்றுகை போராட்டம்: எஸ்டிபிஐ கட்சியினர் கைது

2 months ago 10

சென்னை: ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில், முஸ்லிம்கள் மீதுவெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேனாம்பேட்டை போலீஸார், போராட்டக்காரர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Read Entire Article