அமரன் படத்தின் 'வெண்ணிலவு சாரல்' பாடல் வெளியானது

3 months ago 26

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

சமீபத்தில் 'ஹே மின்னலே' பாடல் வெளியானது. இது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், அமரன் படத்தின் இரண்டாவது பாடல் 'வெண்ணிலவு சாரல்' தற்போது வெளியாகி இருக்கிறது. யுகபாரதி வரிகளில் வெண்ணிலவு சாரல் பாடலை கபில் கபிலன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ் இணைந்து பாடியுள்ளனர்.


Presenting the beautiful second single, #VennilavuSaaral, from #Amaran - https://t.co/sMEBXDKuqlA mesmerizing composition by @gvprakash, with heartfelt vocals by @KapilKapilan_ & @RakshitaaSuresh, and lyrics by @YugabhaarathiYb.@ikamalhaasan #Mahendran @Rajkumar_KP

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 17, 2024
Read Entire Article