'அமரன்': சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தது எப்படி? - பகிர்ந்த இயக்குனர்

3 months ago 31

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமரன் படத்தில் சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தது எப்படி என்பதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'அமரன்' படத்தில் மேஜர் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில் சில குழப்பம் இருந்தது. நிறைய பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், சில விஷயம் எங்களுக்கும், சில விஷயம் அந்த நடிகருக்கும் தடையாக இருந்தது. இப்படியே போய்கொண்டே இருந்தது. அப்போதுதான் புதுமுக நடிகரை தேர்ந்தெடுக்கலாமா? என்ற சிந்தனை எனக்கு வந்தது.

பின்னர் மகேந்திரன் சார் ஒரு பெரிய நடிகரை அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்தால் அது மேஜர் முகுந்தனுக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என்றார். அப்போது என் மனதில் சிவகார்த்திகேயன் தான் வந்தார்,'என்றார்.

Read Entire Article