
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அமரன் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இப்படத்தையடுத்து சாய்பல்லவி நடித்த படம் தண்டேல். நாக சைதன்யா கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த 7-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.