சென்னை: அப்துல் கலாம் கல்வி உதவித்தொகை என்று பரவும் செய்தி வதந்தி என அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. ‘10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோருக்கு ரூ.10,000 என்பதும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.25000 என்பதும் வதந்தி. அப்துல் கலாம் பெயரில் மாணவர்களுக்கு உதவித்தொகை தர எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை’ என அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
The post அப்துல் கலாம் கல்வி உதவித்தொகை என்பது வதந்தி: அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் appeared first on Dinakaran.