சென்னை: அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார போட்டியால் கட்சி இரண்டாக உடைந்து உள்ளது. இருவரும் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ‘நான்தான் கட்சிக்கு தலைவர், தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை அங்கீகரிக்க வேண்டும்’ என இருவரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த ராமதாஸ், ‘அன்புமணி தனது பெயரை பயன்படுத்தக்கூடாது, வேண்டுமென்றால் இனிஷியலை பயன்படுத்தி கொள்லலாம்’ அறிவித்தார். இதனிடையே தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராமதாஸ் நேற்று புகார் கூறியிருந்தார். தனது சமூக வலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் மீட்டு தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார் அளித்தார். தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம், முகநூல் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர். சமூக வலைதள கணக்குகளின் பாஸ்வேர்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
இதனால் மே 28ம் தேதிக்கு பின் தனது சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. ஊடகங்களுக்கு அறிக்கைகள் அனுப்ப பயன்படுத்தும் மின்னஞ்சலையும் பயன்படுத்த முடியவில்லை. தனது சமூக வலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் மீட்டு தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.
The post அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து தனது சமூக வலைதள கணக்குகளை மீட்டுத் தர டிஜிபியிடம் ராமதாஸ் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.