அன்னை சத்யா விளையாட்டு நடைப்பயிற்சியாளர் சங்கம் கூட்டம்

2 months ago 12

 

தஞ்சாவூர், டிச. 17: அன்னை சத்யா விளையாட்டு நடைப்பயிற்ச்சியாளர் சங்கம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌரவ தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் சீனிவாசன், செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நமது சங்க பெயர் பலகை வைப்பது, ஜனவரி முதல் நாள் சிறப்பாக எப்பொழுதும் போல் கேக்கு வெட்டி கொண்டாடுவது. சுத்திரிக்க பட்ட குடி தண்ணீர் வைப்பது, நடை பயிற்சியாளர்களுக்கு டீசர்ட் வழங்குவது. நடைப்பயிற்ச்சியாளர் இரு சக்கர வாகனம் வைப்பதற்க்கு இடத்தை சுத்தம் செய்து பவர் பிளாக் செய்து கொடுத்த அதிககரிகளுக்கு நன்றி தெரிவப்பத.

மாடுகள் உள்ளே வருவதை தடுக்க வேண்டும் என்று அதிகாரியிடம் மனு அளிப்பது, எப்பொழுதும் போல் மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு எட்டு கிலோ மீட்டர் தொடர்ந்து சிறப்பாக நடைப்பயிற்ச்சி நடைப்பெறும், உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பொறுப்பாளர்கள் சுகுமார், சுப்பிரமணியன், ராஜேந்திரன், மாரிமுத்து ,சந்திரசேகர் ரங்கராஜ் ,மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பார்த்தசாரதி நன்றி கூறினார்.

The post அன்னை சத்யா விளையாட்டு நடைப்பயிற்சியாளர் சங்கம் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article