அன்னவாசலில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கல் குவாரியில் தவறி விழுந்து பலி

3 months ago 19

 

விராலிமலை, அக்.3: அன்னவாசல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் கல்குவாரி மேலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அன்னவாசல் அடுத்த பரம்பூர் ஆனைபட்டியை சேர்ந்த சிதம்பரம் மனைவி முத்தம்மாள் (70). இவர் கடந்த இரண்டு வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுவட்டாரத்தில் ஆங்காங்கே சுற்றி திரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பரம்பூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் மூதாட்டி ஒருவர் சடலமாக கிடப்பதாக அன்னவாசல் போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது, உயிரிழந்தவர் முத்தம்மாள் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தற்செயலாக சுற்றி திரியும் போது குவாரி மேலிருந்து கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில், தெரிய வருவதாக போலீசார் தெரிவித்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து அன்னவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post அன்னவாசலில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கல் குவாரியில் தவறி விழுந்து பலி appeared first on Dinakaran.

Read Entire Article