அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம்: நியூசிலாந்து தமிழ் சங்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு

2 months ago 7

சென்னை: எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து நாட்டின் தமிழ் சங்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நகரில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள் கலந்துகொண்டு, உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.

பின்பு, கெயின்ஸில் இருந்து புறப்பட்டு நியூசிலாந்து நாட்டிற்கு சென்றடைந்தார். நியூசிலாந்து நாட்டில், ஆக்லாந்து நகரிலுள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பேரவை தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பாவு பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும்.

அந்த வழியில் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப்போல, சாமானிய வீட்டு பிள்ளைகளும் அதுபோல் தரமான கல்வி கற்க வேண்டுமென்பதற்காக பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை வசதியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். நான் இந்தியன், பிறப்பால் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அனைவருக்கும் அடையாளம், பெருமை. அதை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமிழை கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம்: நியூசிலாந்து தமிழ் சங்க விழாவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article