அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இன்றும், நாளையும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை தலைவர் தகவல்

1 week ago 3


சென்னை: அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இன்றும், நாளையும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான நவ.7 மற்றும் நவ.8 ஆகிய நாட்களில்(இன்றும், நாளையும்) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான நவ.7 மற்றும் நவ.8 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இன்றும், நாளையும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article