சென்னை,
அரசு பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழாவின் நினைவாக வைக்கத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து சேவை இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆசிரியர் கி.விரமணி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி வைக்கம்-சென்னை வழித்தடத்தில் 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அரசு பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்."
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.