'அனிமல்' ரிலீஸுக்கு முன்பே 'ஹரி ஹர வீர மல்லு' படக்குழுவினர் என்னை அணுகினர் - பாபி தியோல்

3 hours ago 2

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரான பவன் கல்யாண் தற்போது நடித்துள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில், அனிமல் படத்தின் ரிலீஸுக்கு முன்பே தன்னை ஹரி ஹர வீர மல்லு படக்குழுவினர் அணுகியதாக பாபி தியோல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"அனிமல் படத்தின் ரிலீஸுக்கு முன்பே ஹரி ஹர வீர மல்லு படத்திற்காக என்னை அணுகினார்கள். நான் ஸ்கிரிப்டைக் கேட்டேன், அது சுவாரஸ்யமாக இருந்தது. ஹரி ஹர வீர மல்லு நாட்டிலுள்ள அனைவரையும் உணர்ச்சியால் இணைக்கும் கதை. இது போன்ற கதைகளை நடிகர்கள் தேர்ந்தெடுப்பது மிக அரிது' என்றார். பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article