சென்னை புழல் அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கோவில் குருக்களை, இருவர் சமயோசிதமாக மீட்டு உயிரை காத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். புழல் சுற்றுவட்டார பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக கோவிலை சுற்றி மழை நீர் தேங்கி இருந்தது.
பூசாரி வாகனத்தில் இருந்து இறங்கி தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி பூஜை செய்வதற்காக கோவிலின் இரும்பு கேட்டை திறக்க முற்பட்டார். பூசாரி கேட்டை தொட்டதும் அவரின் மீது மின்சாரம் பாய்ந்து அப்படியே மயங்கினார்
அதனை கண்ட அப்பகுதி பெண் ஒருவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர், இளைஞர் ஒருவர் தண்ணீரில் இறங்கி சிறிய கம்பால் பூசாரியை கேட்டில் இருந்து தட்டி விட முயன்றார், அவர் மீது சற்றும் மின்சாரம் பாய்ந்ததால் நூழிலையில் தப்பினார்
மற்றொருவர் ஈரமில்லாத பெரிய கம்பு ஒன்றை எடுத்து வந்து இரும்பு கேட்டில் சிக்கி இருந்த பூசாரியின் கையை தட்டி விட்டார், உடனடியாக அருகில் நின்ற இளைஞர், தண்ணீரில் விழுந்த பூசாரியை, சட்டையை பிடித்து இழுத்து வெளியே இழுத்தார்
தொடர்ந்து அவரது நெஞ்சில் கையைத்து அழுத்தி சிபிஆர் சிகிச்சை கொடுத்தனர், வாயில் வாய் வைத்து மூச்சு காற்றையும் கொடுத்து பூசாரியின் உயிரை காப்பாற்றினர்
தொடர்ந்து பூசாரியை மருத்துவமனைக்கு ஆழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் உயிருக்கு போராடிய பூசாரியை சமயோஜிதமாக செயல்பட்டு மீட்ட அந்த இருவருக்கும் பாராட்டுக்குள் குவிந்து வருகின்றது.