'அந்த படம் என்னை விட ரசிகர்களை அதிக சோகமடைய வைத்தது' - மோகன்லால்

4 months ago 21

சென்னை,

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், 'நெரு',படத்தையடுத்து 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கிய இப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்குள்ளானது. இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு கிடைத்த விமர்சனம் தன்னை விட தனது ரசிகர்களையும், நண்பர்களையும் சோகமடைய வைத்ததாக மோகன்லால் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'மலைக்கோட்டை வாலிபன் ஒரு நல்ல படம். அதன் மீது எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இது என்னை விட எனது ரசிகர்களையும் நண்பர்களையும் சோகமாக்கியது. படம் வரவேற்கப்படவில்லை என்றால் முழு பழியும் நடிகர் மீது வரும். இனி கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' என்றார்.

முன்னதாக 'மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் லிஜோ ஜோஸ், இப்படத்திற்கு இப்படி ஒரு விமர்சனம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து வெளிவர மூன்று வாரங்கள் ஆனதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article