அந்த தொடர் வரை நான் கேப்டனாக இருக்கிறேன் - பி.சி.சி.ஐ.-யிடம் கூறிய ரோகித்.. வெளியான தகவல்

5 hours ago 2

மும்பை,

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு சமீபத்திய பார்டர் - கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவை மோசமானதாக அமைந்துள்ளன. இரண்டு தொடர்களிலும் தோல்வியை தழுவியதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்த தோல்விகளுக்கு கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சொதப்பிய ரோகித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவரை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பி.சி.சி.ஐ. நடத்திய மீட்டிங் ஒன்றில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் வெளியான தகவலின் படி, ரோகித் சர்மா தான் இன்னும் சில மாதங்கள் வரை கேப்டனாக இருக்க விரும்புவதாக பி.சி.சி.ஐ.-யிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி முடியும் வரை தான் கேப்டனாக இருக்க விரும்புவதாகவும் அதன் பிறகு அடுத்த முடிவை எடுக்கலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

Read Entire Article