‘அந்த ‘சார்’கள் வெட்கித் தலைகுனியட்டும்’ – பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

3 hours ago 3

சென்னை: “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் முழு விவரம்

A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை – ரூ.40,000 அபராதம்
A2 குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.35,000 அபராதம்
A3 குற்றவாளி சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை – ரூ.18,500 அபராதம்
A4 குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை – ரூ.13,500 அபராதம்
A5 குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.18,000 அபராதம்
A6 குற்றவாளி பாபு-க்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.10,500 அபராதம்
A7 குற்றவாளி ஹெரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனை -ரூ.14,000 அபராதம்
A8 குற்றவாளி அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,500 அபராதம்
A9 குற்றவாளி அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.8,000 அபராதம்

The post ‘அந்த ‘சார்’கள் வெட்கித் தலைகுனியட்டும்’ – பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article