
சென்னை,
நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். தற்போது அவர் சல்மான் கானுடன் 'சிக்கந்தர்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகின் ரகசியம் என்ன என்று கேட்ட ரசிகருக்கு ராஷ்மிகா பதிலளித்திருக்கிறார். அவர் அதில், ' உண்மையான, அன்பான, நல்ல மக்கள் என்னை சுற்றி இருப்பது என் மனதையும் இதயைத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. அவர்கள் என் சருமத்திற்கு சிறந்த தோல் மருத்துவர்கள். அப்பா - அம்மா மற்றும் அவர்களின் நல்ல மரபணுக்களின் ஆசீர்வாதம்தான் இந்த அழகின் ரகசியம்' என்றார்.