‘அதிமுகவின் பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும்’ - ஓபிஎஸ் விருப்பம்

8 hours ago 5

திருப்பத்தூர்: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “அதிமுக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதாவும் அந்த சட்ட விதிகளைத்தான் கடைபிடித்தார். இப்படியான வரலாற்றைக்கொண்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கிறது.

Read Entire Article