“அதிமுகவினரின் அதிருப்தியை நாம் பயன்படுத்த வேண்டும்” - திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

11 hours ago 5

சென்னை: “பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நமது பலமே திமுகவின் கட்டுமானம்தான். வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத இந்த நிர்வாக கட்டமைப்பை காலம்தோறும் புதுப்பிக்கிறோம். புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். வரும் தடங்கல்களை உங்கள் உழைப்பால் வெல்ல வேண்டும்.

Read Entire Article