சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, 2022ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது. எனவே, இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுகிறேன் என்று நீதிபதி அறிவித்தார். மேலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
The post அதிமுக பொதுக்குழு வழக்கிலிருந்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகல் appeared first on Dinakaran.