சென்னை: “அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்?” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று (திங்கள்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் நீதி கேட்டும், அதிமுகவினர் கைதைக் கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.