“அதிமுக, பாஜக இணைந்து போராடும்!” - திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு

1 week ago 6

சிவகங்கை: “ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் வரை அதிமுக, பாஜக இணைந்து போராடும்” என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: "அஜித்குமார் குடும்பத்தினர் வாய் திறக்கவே பயப்படுகின்றனர். திமுக பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர். சாத்தான்குளத்துக்கு ஓடோடி சென்ற ஸ்டாலின் குடும்பம், மடப்புரத்துக்கு ஏன் வர மறுக்கிறது?

Read Entire Article