அதிமுக எம்எல்ஏ திடீர் கைது

3 hours ago 1

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரையில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனை நான்குவழிச்சாலையாக மாற்றும் பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று வருகிறது. இதில் திருமங்கலம் பகுதியில் சேடபட்டி பிரிவில் புதிய மேம்பாலம் அமைத்துள்ளனர். இந்த புதிய மேம்பாலத்தை ஆலம்பட்டி வரை நீட்டிப்பு செய்து, சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி நேற்று காலை 7.30 மணிக்கு 300க்கும் மேற்பட்ட ஆலம்பட்டி கிராம மக்கள், திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் இருபுறமும் சுமார் ஒரு கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதில் திருமங்கலம் அதிமுக எம்எல்ஏவான மாஜி அமைச்சர் ஆர்பி.உதயகுமார், நிர்வாகிகளுடன் வந்து மறியலில் ஈடுபட்டார். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 11 மணிவரையில் நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், எம்எல்ஏ உதயகுமார் உள்பட அனைவரையும் கைது செய்தனர்.

The post அதிமுக எம்எல்ஏ திடீர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article