சென்னை : அதிமுக ஆட்சியில்தான் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று உள்ளன என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “துணை முதல்வர் பதிலுரையை திட்டமிட்டே அதிமுகவினர் புறக்கணித்துவிட்டுச் சென்றுள்ளனர். பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பும் பிரச்சனைகளுக்கு அரை மணி நேரம் முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அரைமணி நேரத்துக்கு முன்பு தெரிவிக்காமல் அவையில் பேச வேண்டும் என்று அதிமுகவினர் பிரச்சனையை ஏற்படுத்தினர்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அதிமுக ஆட்சியில்தான் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று உள்ளன : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.