அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை; தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 days ago 4

சென்னை: அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான கேள்வி நேர விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னறிவிப்பு இல்லாமல் பேச அனுமதி கோரினார். மரபின்படி அறிவிப்பே கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என சபாநாயகர் பதில் தெரிவித்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இன்று நாள் முழுவதும் அவையில் கலந்து கொள்ள முடியாது என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். தயாராக உள்ளேன். டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனக் கூற மாட்டேன். ஆனால், மரபை பின்பற்றுங்கள்” என தெரிவித்தார். மேலும், தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது: முதல்வர்

தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட சிலர் துடிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரம்போன்று இந்த ஆட்சியில் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே வீண் புரளிகளை பரப்புகிறார்கள். ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய முன்வாருங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

 

The post அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கலவரங்கள், இந்த ஆட்சியில் ஏற்படவில்லை; தமிழ்நாட்டில் பொது அமைதி நிலவுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article