“அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது” - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

1 day ago 7

அரியலூர்: அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளில் அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை காணவில்லை என ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேருந்துகளை தொடங்கி வைத்தபோதே அரசு போக்குவரத்துக்கழகம் என்றுதான் உள்ளது.

Read Entire Article