அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்றி முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

2 months ago 10

சென்னை: தமிழக காங்கிரஸ் பழங்குடியினர் துறை சார்பில், சுதந்திர போராட்ட வீரரும், பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடியவருமான பிர்சா முண்டாவின் 150 பிறந்த நாள் விழா சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, சிறுபான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன் பழங்குடியினர் பிரிவின் மாநில பொருளாளர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அப்போது, நிருபர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: பழங்குடி இன மக்களின் ஒரே தலைவர் பிர்சா முண்டா. அவரது பிறந்த நாளை தமிழக காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. இப்போது 16வது நிதி குழு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளது. அதில், காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளை யும் மீட்டெடுப்பதற்காக அந்த கூட்டத்தில் அவர் குரல் கொடுப்பார். மதுரையில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் இரும்பு கரம் கொண்டு இதுபோன்ற பிரச்னைகளை அடக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் கரத்தை பலப்படுத்த வேண்டுமென்றால் அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்றி முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article