அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

2 months ago 14

 

தேவகோட்டை,செப்.30:தேவகோட்டை வஉசி பேரவை சார்பில், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் பேரவையின் 27ம் ஆண்டு விழா நடைபெற்றது. பேரவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜூ வரவேற்றார். பொருளாளர் ஜானகிராமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் ஆண்டறிக்கை வாசித்தார்.

அகில இந்திய வெள்ளாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் சிவதேசிகன், பேரவை புரவலர் லண்டன் முருகேசன்,விஏஓ சங்க நிறுவனர் போஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலூர் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. நலிவடைந்த 50 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.

The post அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article