அதானியை கைது செய்ய வலியுறுத்தி 28-ம் தேதி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

3 months ago 10

சென்னை: சூரிய ஒளி மின்சார ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தி வரும் 28-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

Read Entire Article