அண்ணாமலையை கிண்டல் செய்ததால் ஆத்திரம்; செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ நிர்வாகி அறிவிப்பு

3 months ago 16

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகளைப் பார்த்து, ‘நான் பேசுவதற்கெல்லாம் ஆட்டுக்குட்டியைப் போல தலையை ஆட்ட வேண்டாம். ஆட்டுக்குட்டி லண்டன் போய் விட்டது’ என அண்ணாமலையை கிண்டல் செய்திருந்தார். இந்நிலையில், இது குறித்து மதுரை மாவட்ட பாஜ தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தெர்மோகோல் விஞ்ஞானி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொடர்ந்து எங்களது மாநில தலைவர் அண்ணாமலையை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அண்ணாமலையிடம் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், பாஜ சார்பில், நீ செல்லும் இடம் எல்லாம் உனக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலையை கிண்டல் செய்ததால் ஆத்திரம்; செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம்: மதுரை பாஜ நிர்வாகி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article